தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காஞ்சனா 3′ படப்பிடிப்பில் ராகவா லாரன்சுடன் இணைந்த ஓவியா

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் `காஞ்சனா’ படத்தின் மூன்றாவது பாகத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது. முதல் நாள் படப்படிப்பில் நடிகை ஓவியா கலந்து கொண்டார்.
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி’.

அதனைத் தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி’ படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா’ வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா 2′ படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், `காஞ்சனா’ படத்தின் மூன்றாவது பாகம் தற்போது உருவாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் `முனி’ படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா இப்படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருக்கும் நடிகை ஓவியா `காஞ்சனா 3′ படத்திலும் இடம்பிடித்துள்ளார். நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறாக எதிர்பார்ப்புகளை கூட்டியிருக்கும் `காஞ்சனா 3′ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Comments
Loading...