தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காணாமல்போனோர் தொடர்பாக இராணுவ தளபதியை விசாரணைக்கு உட்படுத்துமாறு சர்வதேமனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை…

இலங்கையில்   பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறியவேண்மென சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

இதற்காக இராணுவத்தின் மனித உரிமைகளுக்கு பொறுப்பான தளபதியை விசாரணைக்கு உட்படுத்துமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

மனித உரிமைகள் தொடர்பான புள்ளிவிபரங்களுக்கான சமூகம் மற்றும் ITJP என்ற சிறிலங்காவின் உண்மைக்கம், நீதிக்கமான சர்வதேச செயற்திட்டம் ஆகியன  இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் அவை புதிய அறிகை ஒன்றையும் வெளியிட்டுள்ளன.

யுத்தத்தின் போதும், அதற்குப் பின்னரும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிவந்தவர்கள், இலங்கையில் வாழ்ந்துவரும் தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்,

மற்றும் உறவினர்கள்  வழங்கிய தகவல்களை ஆராய்ந்து,  இந்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இதில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடிவுக்கு கொண்டுவரப்ட்டதாக அறிவிக்கப்பட்ட யுத்தத்தின் கடைசி 48 மணித்தியாலங்களில் சரணடைந்த, ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 500 ஆக இருப்பதாகவும் குறிப்பிடபப்ட்டுள்ளது.

ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் காணாமல் ஆக்கப்பட்ட மிகப் பெரிய தொகையினர் இதுவே என்றும் அந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டுள்ள 500 பேரில் 29 பேர் குழந்தைகள் என்று்ம்   அவைகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில்  58 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக, இலங்கை  இராணுவத்தின் தற்போதைய மனித உரிமைகள் அலுவலகத்தின் பணிப்பாளராக கடமையாற்றிவரும் மேஸர் ஜெனரல் சசேந்திர சில்வாவே இருந்ததாகவும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...