தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின்  பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலொன்று  வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா இராணுவத்திடம் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் ஒப்படைக்கப்பட்டு  காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின்  பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலொன்று  வெளியிடப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களில்  நூற்றுக்கணக்கானவர்களின் பெயர்கள் அதில் அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில்  ஒரே தினத்தில் அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் இந்த பெயர் பட்டியலில் 30 சிறுவர்களின் விபரங்களும் அடங்குவதாக  இலங்கையின்  ITJP என்ற  உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் கவலை வெளியிட்டுள்ளது.

இந்த சிறுவர்களில் பலர் ஐந்து வயதுக்கும் குறைந்தவர்கள்  அந்த அமைப்பு சுட்டிக்காடியுள்ளது.

ஊடக சந்திப்பு

இலங்கை அரசாங்கத்தினால்  போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்றையதினம்  யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் ஒப்படைக்கப்பட்ட 280 பேரினது பெயர் பட்டியலை அவர்களது உறவினர்களின் பங்குபற்றுதலுடன் ITJP  வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...