தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு ஜெனீவா செல்ல விசா கொடுக்க மறுத்த சுவிஸ் அரசு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் இனப்படுகாெலைக்கு உள்ளான குடும்பங்களை சேர்ந்தவர்கள் தமிழா் தாயக பகுதிகளில் தாெடர்ந்து பாேராடி வருகின்றார்கள்.
இவர்களில் ஒரு தொகுதியினர், நீதி காேரி நேரடியாக ஐ.நா மனித உரிமைப் பேரவை கூட்டத்தாெடரில் பங்குபற்ற விண்ணப்பித்திருந்த நிலையில், அவா்களுக்கு வீசா வழங்க சுவிஸ் அரசாங்கம் மறுத்துள்ளது.
விண்ணப்பித்த, எட்டுப்பேரில் இரண்டு பேருக்கு விசா கொடுக்கப்பட்ட நிலையில் ஏனைய ஆறு பேருக்கு சுவிஸ் அரசாங்கம் விசாவிற்கு அனுமதி கொடுக்கவில்லை. இனப்படுகொலையை நியாயப்படுத்த இராணுவத்திற்கு அனுமதி கொடுக்கும் சுவிஸ் அரசாங்கம் பாதிக்கப்பட்டவா்கள் தங்கள் கருத்தை முன்வைக்க அனுமதி மறுத்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் நசுக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...