தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காமன்வெல்த்தில் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெள்ளி வென்றார்…!!

காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி மலேசியாவின் லீ சாங் வெய்யை எதிர் கொண்டார்.

இதில் 21-19, 14-21, 14-21 என்ற செட்களில் லீ சாக் வெய்யிடம் தோல்வியை தழுவினார். இதன் மூலம் வெள்ளிபதக்கத்தை கைப்பற்றினார்.

இருப்பினும் காமன்வெல்த் போட்டிகளில் இது கிடாம்பி ஸ்ரீகாந்த் பெரும் முதல் பதக்கம் இதுவாகும்.மேலும் உலகதர வரிசையில் ஸ்ரீகாந்த் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இந்தியா 26 தங்கம், 19 வெள்ளி, 20 வெண்கலம் உள்பட 65 பதக்கங்களுடன் 3-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

Comments
Loading...