தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காற்றின் மொழி – விமர்சனம்..

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த விதார்த் – ஜோதிகா வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். விதார்த் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். குறைவான சம்பளம் என்றாலும் மனநிம்மதியுடன் குடும்பத்தை நடத்தி வருகிறார்கள்.
12-ஆம் வகுப்பில் தோல்வியடைந்தத, ஜோதிகா தனது திறமையை நிரூபிக்க ஏதாவது மேடை கிடைக்காதா என்று எதிர்பார்த்து வருகிறார் ஜோதிகா.
இந்த நிலையில் ஹலோ எப்.எம். நடத்தும் நிகழ்ச்சியில் பரிசு வெல்லும் ஜோதிகா, எப்.எம்.-ல் ஆர்.ஜே.,வாகும் முயற்சியில் இறங்குகிறார். குரல் தேர்வு முடிந்து எப்.எம்.-ல் வேலைக்கும் சேர்கிறார். ஜோதிகாவுக்கு இரவு நேர நிகழ்ச்சிகள் ஒதுக்கப்படுகிறது. இதனால் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியவில்லை.

மனைவியுடன் நேரத்தை செலவிட முடியவில்லை என்று விதார்த் வருத்தப்படுகிறார். இதனால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்படுகிறது.
இது இவர்களது குடும்பத்தில் என்னென்ன பிரச்சனைகளை உருவாக்குகிறது? எப்.எம்-க்கும் போன் செய்யும் பலரது பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் ஜோதிகா, தனது குடும்ப பிரச்சனையை எப்படி சமாளித்தார்? ஆர்.ஜே. வேலையில் தொடர்ந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை ஜோதிகா தனது அழகான நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டிப் போடுகிறார்.
படத்தில் கதையின் போக்குக்கு ஏற்ப விதார்த்தை காட்டியுள்ளார்  இயக்குநர்,
ஏ.எச்.காஷிப் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமையாக வந்திருக்கின்றன.

 

 

Comments
Loading...