தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கின்னஸ் சாதனை படைத்துள்ள சீனா

1374 ட்ரோன் விமானங்களை வானில் பறக்கவிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது சீனா .

ஏற்கனவே அமெரிக்க நிறுவனம் ஒன்று 156 ட்ரோன் விமானங்களை பறக்க விட்டதும், தென்கொரிய குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் போது ஆயிரத்து 218 ட்ரோன் விமானங்களை பறக்க விட்டதுமே இதுவரை சாதனையாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் சீனாவை சேர்ந்த ட்ரோன் தயாரிப்பு நிறுவனம் ஒன்று ஒரே நேரத்தில் 1374 விமானங்களை பறக்க விட்டு புதிய சாதனை படைத்துள்ளது.

சீனாவில் உள்ள சியான் நகரில் இரவு நேரத்தில் பறந்த இந்த ட்ரோன்கள் வண்ண விளக்குகளை ஒளிரச் செய்து அழகிய ஒளி உருவங்களை உருவாக்கியமை  அனைவரையும் வியக்கச் செய்துள்ளது.

 

Comments
Loading...