தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிரிக்கெட் சாராத நிகழ்ச்சிகளில் பங்கேற்க வீரர்களுக்கு தடை விதிப்பது தொடர்பில் பிசிசிஐ ஆலோசனை…

கிரிக்கெட் சாராத நிகழ்ச்சிகளில் பங்கேற்க வீரர்களுக்கு தடை விதிப்பது பற்றி பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.

காபி வித் கரண் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா, பெண்கள் குறித்து இழிவாகப் பேசியதாகப் புகார் எழுந்தது.

இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் பாண்ட்யாவுக்கு எதிர்ப்பு எழவே, இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு பாண்ட்யாவுக்கும்,  கே.எல்.ராகுலுக்கும் பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பில் 24 மணிநேரத்துக்குள் விளக்கம் அளிக்க அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்ந்த நிலையில் இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவதை தவிர்க்க, கிரிக்கெட் சாராத நிகழ்ச்சிகளில் பங்கேற்க வீரர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது பற்றி பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...