தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பிரதேசத்தை சேர்ந்த ஆணோருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்  46 வயதுடையவர் என்றும், கடந்த 12 ஆம் திகதி முதல் அவர் காணாமல் போயுள்ளதாகவும்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நபர் கொழும்பில் வேலை செய்பவர் என்றும், அங்கிருந்து வீடு திரும்பும் வேளையே, காணாமல் போனதாக அவரது மனைவி முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது

Comments
Loading...