தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சி யுவதி செல்வி பவித்திரா தேசிய ரீதியில் உயரம் பாய்தல் போட்டியில் 3ஆம் இடம்…

கருத்திட்ட முகாமைத்துவ இளைஞர் விவகார தெற்கு அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவரும்   தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம் தோறும் நடாத்திவரும் ,

தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 30 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா  மாத்தறை கொட்டவிலவில் அமைந்துள்ள மாத்தறை   மாவட்ட  பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.

இந்த நிகழ்வின்  2018.10.27 ம் திகதி 13-20 வயது பிரிவில் செல்வி பவித்திரா உயரம் பாய்தல் போட்டியில் 3ம் இடத்தைப் பெற்று கண்டாவளை பிரதேசத்துக்கும்  கிளிநொச்சி மாவட்டத்துக்கும்  வடமாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்

Comments
Loading...