தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சி விவசாயிகளின் எதிர்ப்பினை மீறி இரணைமடு- யாழ்ப்பாணம் குடிநீர் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை..

கிளிநொச்சி விவசாயிகளின் எதிர்ப்பினைமீறி  இரணைமடு- யாழ்ப்பாணம் குடிநீர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இதற்காக வடமாகாண  ஆளுநர் கொழும்பில் இரகசிய சந்திப்புக்களை மேற்கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்தவகையில்ஆளுநரின் கொழும்பு அலுவலகத்தில் இரணைமடு- யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இதில்  வடமாகாண நீர் வழங்கல் திணைக்கள பணிப்பாளர்,வடமாகாண நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாகவும் அறியக்கிடைத்துள்ளது.

இரணைமடு குளத்தின் மையத்தில் பாரிய  கிணறு ஒன்றை அகழ்ந்து அதிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ளலாம் எனவும்,

இதனை விவசாயிகள் எதிர்த்தால் இராணுவத்தை கொண்டு அவர்களை  அடக்கவேண்டும் எனவும்   ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...