தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிழக்கு சீமையிலே படத்தின் பின் பெருமைக்கொள்ளும் படைப்பாக “60 வயது மாநிறம்” – தயாாிப்பாளர் தானு..

கிழக்கு சீமையிலே படத்துக்குப் பிறகு  நான் பெருமைக்கொள்ளும் படைப்பாக  “60 வயது மாநிறம்” அமையபெற்றுள்ளது என தயாாிப்பாளர் தானு கூறியுள்ளார்.
இசைஞானி  இளையராஜாவின்  இசையில்  தாணு தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் 60 வயது மாநிறம் படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு,  சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
விஜி வசனத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு பா. விஜய், பழனி பாரதி, விவேக் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த மாதம் 60 வயது மாநிறம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், .
இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் தாணு ட்விட்டரில் கூறியுள்ளதாவது:
கிழக்கு சீமையிலே எனும் கிராமத்து காவியம் வெளிவந்து 25 ஆண்டுகள் கடந்த பின்பு , என் கலையின் தாகத்தை தீர்க்கும் விதமாக, நான் என்றும் பெருமைக்கொள்ளும் படைப்பாக “60 வயது மாநிறம்” அமையபெற்றுள்ளது எனக்கு மிகுந்த மனநிறைவை தந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார் .
Comments
Loading...