தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக இலங்கையில் மழை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு..

இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வானிலைக் குழப்பத்தின் காரணமாகஇலங்கையில்   மழை தொடரக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இத்தகவலை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக,

நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இதன்காரணமாக இலங்கையில்  வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாகவும்,

ஏனைய பிரதேசங்களில் பி.ப.2.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாகவும் திணக்களம் கூறியுள்ளது.

மேலும்  இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில்  தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு  மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...