தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

குஜராத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்

8 வயதுச் சிறுமி ஆசிஃபா பானு கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தால் காஷ்மீர் பகுதியே கொந்தளிப்பில் உள்ளது.

இந்நிலையில்  அந்த ரணம் ஆறுவதற்கு முன்னரே , குஜராத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியின்  சடலத்தைப் பொலிஸார் நேற்றைய தினம் மீட்டுள்ள நிலையில் சிறுமியின் உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உடல் பரிசோதனை அறிக்கையில் சிறுமியின் பிறப்புறப்பு மற்றும் உடம்பில் மொத்தம் 86 இடங்களில் கட்டையால் தாக்குப்பட்ட காயங்கள் உள்ளதாகவும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலம் கத்துவா மாநிலத்தில் மேய்ச்சலுக்கு சென்ற குதிரையை தேடி சென்ற 8 வயது சிறுமி காணாமல் போய்  ஒரு வாரம் கழித்து வனப்பகுதியில் ஆசிஃபா உயிரற்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள் குஜராத்தில் உள்ள சூரத்தில், கிரிக்கெட் மைதானம் அருகே உடலில் சுமார் 86 இடங்களில் காயங்களுடன் 11 வயது சிறுமியின் உடலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஆனால் இதுவரை அந்த சிறுமி யார் என்ற அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் காணாமல் போனவர்கள் முறைப்பாடுகளின் அடிப்படையில் குறித்த சிறுமியின்   உடலை அடையாளம் காணும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் குற்றவாளிகளை தேடும் பணியிலும் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். சிறுமி கொடூரமாக வன்புணரப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Comments
Loading...