தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கெத்தான ஸ்கோருடன் இந்திய அணி …

ஆஸ்திரேலியா சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில்,

இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று துவங்கியது.

இதன் பின் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 89 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் அடித்தது.

இந்நிலையில் இன்று 2 -வது நாள் ஆட்டம் தொடங்கியது.இந்திய அணி 169.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 443 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது .

இந்திய வீரர் புஜாரா 106 அதிகபட்சமாக அடித்தார். களத்தில் ரோகித் 63* ரன்களுடன் இருந்தார்.

இதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி தனது ஆட்டத்தை தொடங்கியது.பின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில்  ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 6 ஓவர்கள் முடிவில்  8 ரன்கள் எடுத்துள்ளது.

களத்தில் பின்ச் 3 *,ஹாரிஸ் 5* ரன்களுடன் உள்ளனர்.

Comments
Loading...