தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கேக் ஐ அடிக்கடி உண்பவர்கள் கண்டிப்பாக இதை தெரிந்துகொள்ளவும்..

 கேக் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு பொருள்.
அந்த அளவுக்கு  கேக் என்று கூறிய உடன் சிறயவர்கள் முதல் பெரியவர்கள் வரை  அனைவரும் விரும்பி  சாப்பிட தோன்றும்.  .
எந்த நேரத்திலும் உண்ணகூடிய ஒரு உணவாகவும் கேக் உள்ளது.மிகுந்த சுவை உடையதாக இருந்தாலும் அதில் சில தீமை தன்மைகளும் உள்ளன. அள்விற்கு மீறினால் அமிர்தமும்  நஞ்சு என பெரியவர்கள் கூறியுள்ளார்கள். இந்த கேக்கை அளவிற்கதிகமாக உண்ணும்போது என்னென்ன விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும் என்பதை தெரிந்துகொள்வோம்.

உடல் பருமன்

கேக்கில் அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகள்உள்ளன. எனவே அதனை நாம்  அதிகமாக உட்கொள்ளும் போது , உடலில் கொழுப்புக்களின் தேக்கத்தை அதிகரித்து, உடல் பருமனை அதிகரிகிறது.
சர்கரையின் அளவு
அதுமட்டும் அல்லாமல் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை நோய்க்கான அபாயத்தை அதிகரித்துவிடும் அபாயமும் உள்ளது,
கேக்கில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, கிருமிகளை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளையணுக்களை அழித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும்.
இதய பிரச்சனை
கேக் தயாரிக்கும் பொது அதில் சேர்கப்படும் பொருட்களில் கொழுப்பு சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்கப்படுகின்றன. எனவே அதிகளவு கேக்கை சாப்பிடும் போது, அது இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
கேக்குகளில் சேர்க்கப்படும் நிறமூட்டும் பூச்சுக்கள், செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, சில நேரங்களில் மயக்கம், தளர்ந்து போதல், பலவீனமான உணர்வு போன்றவற்றையும் ஏற்படுத்தக்கூடும்.
எனவே  குழந்தைகளாக ருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் கேக் அதிகம் சாப்பிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு அதனை உட்கொள்வதை குறைத்து கொள்வது  உடலுக்கு நல்லது.
Comments
Loading...