தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் , தனது நீண்ட நாள் காதலி டேனி வில்லிசை கரம் பிடித்தார்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக செயல்பட்டு வந்தவர் ஸ்டீவ் ஸ்மித். பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஓராண்டு தடை நடவடிக்கைக்கு உள்ளானார். தடைக்காலம் முடிந்து மீண்டும் அவரால் மார்ச் மாதம் தான் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்ப முடியும்.
இந்நிலையில் 29 வயதான ஸ்டீவ் ஸ்மித், தனது நீண்ட கால காதலி டேனி வில்லிசை நேற்று திருமணம் செய்தார்.
சட்டப் படிப்பு படித்துள்ள டேனி வில்லிசை 2011-ம் ஆண்டு சிட்னியில் உள்ள ஒரு மதுபான விடுதியில் முதல்முறையாக சந்தித்தார் சுமித். அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. அந்த காதல் தற்போது திருமண பந்தத்தில் முடிந்துள்ளது.
இதுதொடர்பாக, ஸ்டீவ் ஸ்மித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறுகையில், எனது சிறந்த தோழியை திருமணம் செய்துள்ளேன். இது எனக்கு நம்ப முடியாத, மறக்க முடியாத நாள் என பதிவிட்டுள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித்தின் திருமணத்துக்கு நேரில் சென்ற ஆரோன் பிஞ்ச், கவாஜா, மிட்செல் மார்ஷ், கம்மின்ஸ் உள்ளிட்ட சக வீரர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

 

Comments
Loading...