தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கேப்பாபுலவு தேக்கமர வனப்பகுதியில் மீண்டும் நேற்று தீ பரவல்

தீ பரவல்

கேப்பாபுலவு படைமுகாம் வாயில் அமைந்துள்ள பகுதிக்கு அண்மித்த பகுதியில் உள்ள தேக்கங்காட்டு வனப்பகுதியில் நேற்று மாலை  தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று மூன்றாவது  தடவையாக இந்த தீ பரவியுள்ளது கடும் வெய்யில் காரணமாக காட்டுக்கு அருகில் மூட்டிய நெருப்பு காரணமாக  இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம்.

எனவும்  தேக்கமரஞ்சோலைகளில் கீழ் உள்ள காய்ந்த இலைகள் மற்றும் பற்றைகள் தீயினால் எரிந்து சாம்பலாகியுள்ளன அருகில் உள்ள படைமுகாம்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு படையினர் தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.

இந்த தீவிபத்தினால் 25 ஏக்கர் வரையான தேக்கங்காடுகள் எரிந்துள்ளன தீவிபத்தினை அடுத்து அந்த பகுதியில் நிலைகொண்டுள்ள 59 ஆவது படைப்பிரிவினர் தண்ணீர் பாச்சி தீயினை பரவவிடாமல் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.

நிலவும் கடும் வெப்பமான காலநிலையில் மக்கள் குப்பைகளுக்கு நெருப்பு மூட்டும் போது அவதானமாக செயற்ப்படுமாறு  இராணுவத்தினர் கோரியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 

Comments
Loading...