தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கே.எல் ராகுல் நீக்கம் , புதிதாக எண்ட்ரி கொடுக்கும் இளம் வீரர் !!

ஆஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து கே.எல் ராகுல் நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் மற்றும் ஹனுமா விஹாரிய இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறக்கலாம் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி 26ம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற துவங்க உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரின் துவக்க இருந்தே தொடர்ந்து கடுமையாக சொதப்பி வரும் கே.எல் ராகுல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அறிமுக வீரர் மாயன்க் அகர்வாலை துவக்க வீரராக களமிறக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...