தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொக்குத்தொடுவாயில் மக்கள் இடம்பெயர்வு…..

முல்லைத்தீவு  மாவட்டத்தில் பெய்துவரும் மழைவெள்ளப்பெருக்கு காரணமாக கொக்குத்தொடுவாய் ,
வடக்கு,கருநாட்டுக்கேணி கிராமங்களில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.
மழைவெள்ளம் காரணமாக வெள்ளங்கள் வீடுகளுக்குள் தங்கியுள்ளதால் மக்களின் இயல்புவாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த  வகையில்  இன்று நண்பகல் வரை  இடம்பெயர்ந்த 96 பேர்     கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை மேலும் அதிகரிக்கும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் மக்களுக்கு உதவிகளை வழங்கவுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...