தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொத்தமல்லியின் பயன்கள்

தோலின் சுருக்கங்கள் குறைய கொத்தமல்லி இலையை அரைத்து முகம் அல்லது உடலின் மேலே பூசிக்கொள்ளலாம்.

முகத்தில் கரும்புள்ளிகள் இருப்பின் அவற்றின் மேல் கொத்தமல்லி இலையை அரைத்து பூசினால் கருப்புள்ளிகள் இருக்கும் இடம் மறையும்.

கொத்தமல்லி அம்மைநோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது.செரிமானப்பிரச்சனை வயிற்று வலி போன்றவை இருப்பின், அவைகளுக்கு மிக சிறந்த தீர்வாக கொத்தமல்லி உள்ளது. அம்மை நோய்க்கும் மருந்தாகவும்  பயன்படுகிறது.

கண் சம்மந்தப்பட்ட நோய்களை குணமாக்க தேவைப்படும் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு மற்றும் பாஸ்பரஸ் போன்றவை புதிய கொத்தமல்லி இலைகளில்  நிறைந்துள்ளன.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கட்டாயம் தினமும் உணவில் எடுத்துகொள்ள வேண்டும். ஏனெனில் இரத்ததை சுத்திகரிக்கும் தன்மை கொத்தமல்லிக்கு உள்ளது.  கொத்தமல்லியின் விதைகளை நன்கு கொதிக்க வைத்து  தேநீராக்கி பருகினால், சிறுநீர் பெருகத்தை அதிகபடுத்தும்.
கொத்தமல்லியை அரைத்து சாறு எடுத்து  குடித்தால் உடம்பிலுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் நீங்கி உடல் எடையை குறையும்.
உடலில் அடிக்கடி உண்டாகும் நெஞ்செரிச்சல் மற்றும்  சிறுநீர் சம்மந்தமான தொந்தரவுகளில் இருந்தும் பாதுகாக்கிறது. வாயு தொந்தரவுகள் இருந்தால் உடனடி தீர்வு தரும்.
கொத்தமல்லி சாறு குடிப்பதால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனைகளுக்கு மிகுந்த நன்மையை தரும். மேலும் நமது உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் நன்கு செயல்பட கொத்தமல்லி சிறந்த இயற்கை மருந்தாக உள்ளது.
Comments
Loading...