தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொலைகள் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களின் பின்னணியை எந்தவொரு அரசாங்கமும் கண்டுகொள்வதில்லை – எம்.ஏ.சுமந்திரன்..

நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களின் பின்னணியை எந்தவொரு அரசாங்கமும் கண்டுகொள்வதில்லையென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டதை  முன்னிட்டு பொரளை பொது மயானத்தில் இன்று காலை இடம்பெற்ற  நிகழ்வில்  கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும்  லசந்த விக்ரமதுங்க உள்ளிட்ட பலர் படுகொலைசெய்யப்பட்டுள்ள நிலையில், நீதி நிலைநாட்டப்படாமல் உள்ளதையிட்டு நாம் கவலையடைகின்றோம் என்றும்,

தற்போது புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில்,  இனிமேலாவது இந்த கொலைகள் தொடர்பில் சட்டத்தை நிலைநாட்ட வேண்டுமென  தாம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு இவ்வாறான  விசாரணைகளை முன்னெடுக்க இடையூறுகள் வரலாம் என்றும்,  மிக் விமானக் கொள்வனவுக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்புள்ளதென அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும்  இதற்கான சாட்சிகள் இன்னும் கிடைக்கவில்லை என்றும்,  அதன்காரணமாகவே  இடையூறுகள் ஏற்பட்டிருக்கலாம் என தாம்  சந்தேகிக்கிப்பதாகவும் எம்.ஏ.சுமந்திரன்  இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...