தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட மட்டக்களப்பு இளைஞன்..

மட்டக்களப்பை சேர்ந்த    இளைஞர் ஒருவர் கொழும்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு,கல்லடியை சேர்ந்த மாணிக்கவாசகம் விஜயரூபன்(34வயது) என்பவரே  இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள அரச திணைக்களம் ஒன்றில் கடமையாற்றும் அவர் , தனியார் இணைய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் கடமையாற்றி வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றையதினம்  பணிக்காக அலுவலகம் செல்ல தயாராகிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...