தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொழும்பில் பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் தீ விபத்து …

கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ள்து.

பத்தரமுல்லை, பெலவத்தையில் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலையம் ஒன்றிலேயே இந்த  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு பிரிவினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தீ வேகமாக பரவி வருவதனால்  அப் பகுதியில் பல வெடிப்பு சம்பவங்களும் இடம்பெறுவதாக கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதி ஊடாக போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக  போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...