தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சகல நன்மைகள் அருளும் வெள்ளிக்கிழமை விரதம்

எல்லா நாட்களுமே ஆன்மிக வழிபாட்டிற்கு  உகந்ததாக  இருந்தாலும் வெள்ளிக்கிழமையை  இந்துக்கள் மிகவும் சிறந்த நாளாக கொண்டாடி   வருகிறார்கள்.

இந்த நாளில் அம்பாளை வழிபடுவது விசேஷம்.

வெள்ளிக்கிழமை விரதம்  முருகப்பெருமான், லட்சுமிதேவி, நவக்கிரகங்களில் ஒருவரான சுக்ரன் ஆகியோரின் அருளைப் பெறுவதற்காக கடைபிடிக்கப்படும் விரதம்  ஆகும்.

வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து வந்தால், லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூன்று பேரின் அருளைப் பெறலாம் என்பது ஆன்றோர் வாக்கு.

விரதத்தை  எப்படி ஆரம்பிப்பது

வெள்ளிக்கிழமை  விரதத்தை ஏதாவது ஒரு மாதத்தில் வருகின்ற 3-வது வெள்ளிக்கிழமை அல்லது கடைசி வெள்ளிக்கிழமையில் தொடங்கி, 11 வாரம் மட்டும் விடாது  அனுஷ்டிக்க வேண்டும்.

வீட்டை எப்போதும் சுத்தமாகவே வைத்திருந்தால் செய்வது நம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை  கிடைக்கும்.

நாள்  முழுவதும் லட்சுமி தேவியைப் பற்றிய பக்திப் பாடல்களையோ, முருகப்பெருமான், சுக்ரனைப் பற்றிய பக்திப் பாடல்களையோ பாராயணம் செய்தபடி இருப்பது சிறப்பான நன்மையை வழங்கும்.

தொடர்ந்து 11 வாரங்கள் வெள்ளிக் கிழமையில் விரதம் இருந்து வந்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

புராண வரலாறு

பகீரதன் என்னும் மன்னன் இந்த விரதத்தை கடைப்பிடித்து தான், இழந்து போன தனது அரசுரிமையை திரும்பப் பெற்றதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

எனவே  சிறப்பு வாய்ந்த வெள்ளிக்கிழமை விரதத்தை அனுஷ்டித்து  இறைவனின் அருள் பெற்று இன்புற்று வாழ்வோம்.

Comments
Loading...