தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சங்கடம் தீர்க்கும் ‘சஷ்டி’ விரதம்..

மாதந்தோறும் வருகிற சஷ்டியன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால் நம் சங்கடங்கள் அனைத்தையும் தீர்த்தருள்வான் கந்தவேலன்.

சஷ்டி நாளான இன்று, விரதம் இருந்து சக்தியின் மைந்தன் குமரனை வேண்டினால்,  நம் சங்கடங்கள் அனைத்தையும் தீரும்

மாதந்தோறும் வருகிற சஷ்டியன்று விரதமிருந்து அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று, கண் குளிர அழகன் முருகனைத் தரிசித்துப் பிரார்த்தனை செய்வது நன்மை அளிக்கும்.

இன்று  கந்தசஷ்டி கவசம் முதலானவை பாராயணம் செய்து வழிபடுங்கள்.

முருகனுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. எனவே செம்பருத்தி, சிகப்பு ரோஜா, செவ்வரளி முதலான மலர்கள் சூட்டி, அழகனை இன்னும் அழகுப்படுத்துங்கள்.

சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து உங்கள் வேண்டுதல்களை மனதார அவனிடம் சொல்லுங்கள்.

உங்கள் சங்கடங்களையெல்லாம் தீர்த்தருள்வான் சக்திகுமாரன். தீராத வினைகளையும் தீர்த்தருள்வான் கார்த்திகேயன்.

Comments
Loading...