தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சட்ட விரோதமாக தாயத்திற்கு  செல்ல முயற்சித்த இருவர் கைது..

தமிழகத்தில் இருந்து சட்ட விரோதமாக தாயத்திற்கு  வர முயற்சித்த இருவரை இந்திய கடலோர கடற் படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சகோதரர்களான சிவராஜா மற்றும் அன்பு குமரன் என தெரிய வந்துள்ளது.

இராமேஸ்வரம் மண்டபத்தில் இருந்து சட்ட விரோதமாக தாயகத்திற்கு படகில் சென்று கொண்டிருந்த போதே குறித்த நபர்கள்   கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்திய கடலோர கடற்படையினர் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போதே  கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும்  யுத்தம் காரணமாக கடந்த 1990 ஆம் ஆண்டு படகு மூலம் ஏதிலிகளாக தமிழகத்திற்குச் சென்றதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை இந்திய கடலோர கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிகப்பட்டுள்ளது.

Comments
Loading...