தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சதுர அடி 3500

ரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் `சதுரஅடி 3500′.

நிகில் மோகன் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். இனியா நாயகியாக நடித்திருக்கிறார். ரகுமான், ஆகாஷ், கோவை சரளா,
எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, தலைவாசல் விஜய், பிரதாப் போத்தன், பரவை முனியம்மா, ‘பெசன்ட் நகர் ’ரவி, இயக்குநர் ஷரவண சுப்பையா, சுவாதி தீக்ஷித், மேக்னா முகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பிரான்ஸிஸ், இசை – கணேஷ் ராகவேந்திரா, கலை – ஜனார்த்தனன், எடிட்டிங் – ஆர்.ஜி.ஆனந்த், சண்டைப் பயிற்சி – தளபதி தினேஷ், நடனம் – ஸ்ரீதர், டிசைன்ஸ் – சபீர், ஸ்டில்ஸ் – பாக்யா, வெளியீடு – ஆர்பிஎம் சினிமாஸ், தயாரிப்பு – ஜாய்ச்மோன் & நிதி.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஜாய்சன்

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ்.தாணு படத்தின் இசை மற்றும் ட்ரைலரை வெளியிட, மூத்த இயக்குநரான கே பாக்யராஜ் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ், சிறிய படங்களுக்கு திரையரங்குகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இப்படம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Loading...