தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு, வரும் 29-ம் தேதி டீஸர்

ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது. வரும் 29-ம் தேதி படத்தின் டீஸர் வெளியாக உள்ளது.

ராம்பாலா இயக்கத்தில் சந்தானம், சஹான்யா, கருணாஸ், ஆனந்த்ராஜ், ராஜேந்திரன், மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு’. வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் இது.

ராம்பாலா இயக்கத்தில் சந்தானம், சஹான்யா, கருணாஸ், ஆனந்த்ராஜ், ராஜேந்திரன், மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு’. வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் இது.

சந்தானம் நடிப்பில் வெளியான ‘சக்க போடு போடு ராஜா’ படம் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வந்த ‘மன்னவன் வந்தானடி’ படமும் பைனான்ஸ் பிரச்சினையில் நின்றது. இதனிடையே ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க முடிவு செய்து, பேச்சுவார்த்தையைத் தொடங்கினார் சந்தானம்.

‘தில்லுக்கு துட்டு 2 படத்தில்’ சந்தானம் ஜோடியாக மலையாள நடிகை ஷிர்தா சிவதாஸ் நடித்துள்ளார். ஆனந்தராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘கலக்கப்போவது யாரு’ புகழ் ராமர் ஆகியோர் உடன் நடிக்கும் இப்படத்தை ஹேண்ட்மேட் பிலிம்ஸ் சார்பில் சந்தானம் தயாரிக்கிறார். ஷபீர் இசையமைக்கிறார். தீபக் குமார் ஒளிப்பதிவு செய்ய, மாதவன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார்.

தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 29-ம் தேதி ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் டீஸர் வெளியாகும் என்று படக்குழு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராம்பாலா – சந்தானம் இருவருமே ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியிலிருந்தே நெருங்கிய நண்பர்களாக வலம்வருவது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...