தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சந்திரனுக்கு செல்லும் முதல் சுற்றுலா பயணியாக ஜப்பான் கோடீஸ்வரர்..

சந்திரனுக்கு செல்லும் முதல் சுற்றுலா பயணி என்ற பெருமையை ஜப்பான் கோடீஸ்வரர் பெற்றுள்ளார்.

ஜப்பானை சேர்ந்தவர் யுசாகு மாயிஸாகா. ரூ.21,000 கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரர்.

ராக் பாடகராக வாழ்க்கையை துவக்கிய இவர் தற்போது ஆன்லைன் பேஷன் மால் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அதோடு இவர், ஓவியம் உள்ளிட்ட அறிய கலை பொருட்களை சேகரிப்பதால் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த ஆண்டு, ரூ.770 கோடி செலவு செய்து ஒரு ஓவியத்தை வாங்கியுள்ளார்.

இவரிடம் ஏராளமான விமானங்கள், சொகுசு கப்பல்கள் உள்ளன.

இந்த நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனம், 2023ம் ஆண்டு சந்திரனுக்கு சுற்றுலா செல்லும்  பயணியாக யோசாகு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

42 வயதான யோசாகு, ஜப்பான் நாட்டின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 18 வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...