தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும்

ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் – உகாண்டா

நாட்டு வருமானத்தை அதிகரிக்கவும், போலி செய்திகளை ஒழிக்கவும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், வைபர் மற்றும் ட்விட்டர் போன்ற குறுந்தகவல் செயலி மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு வரி விதிக்க உகாண்டா அரசு திட்டமிட்டுள்ளது.

ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக இருக்கும் புதிய வரிச் சட்டம்படி , குறிப்பிட்ட செயலிகள் அல்லது சேவைகளை பயன்படுத்துவோர்கள், தினமும் 200 ஷில்லிங் வரி செலுத்த வேண்டும்.

மார்ச் மாதத்தில் அந்நாட்டு குடியரசு தலைவர் யோவெரி முஸ்வேனி, சமூக வலைத்தளங்கள் போலி செய்திகள் மற்றும் கிசுகிசுக்களை ஊக்குவிப்பதாக தெரிவித்திருந்தார்.
உகாண்டா பாராளுமன்றத்தில் புதிய சட்டத்திற்கான ஒப்பதல் வழங்கப்பட்டதும், சட்ட குறிப்பில் கையொப்பமிடுவதாக முஸ்வேனி தெரிவித்துள்ளார். இதை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்து இருக்கிறார்.
Comments
Loading...