தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சர்வதேச தமிழ் ஒழுங்கமைப்புகளின் உலக தமிழ் மாநாடு, கம்போடியாவில் நடைபெற உள்ளது.

சர்வதேச தமிழ் ஒழுங்கமைப்புகளின் சம்மேளனத்தினது உலக தமிழ் மாநாடு, கம்போடியாவில் எதிர்வரும் மே மாதம் 19ம் மற்றும் 20ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

கம்போடியாவில் உள்ள புகழ்பெற்ற அங்கோர் வட்டில் உள்ள ஆலய மண்டபத்தில்  இந்த மாநாடு நடைபெற உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த  மாநாடு சீனா, ஜப்பான், கொரியா, இந்தியா, தாய்லாந்து, இலங்கை, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கின்ற தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்த மாநாடு  நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...