தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சாகர் புயலில் இருந்து தப்பியது இலங்கை!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ‘சாகர்’ எனப்படும் காற்றழுத்தத் தாழமுக்கம், நாட்டைவிட்டு முற்றாக விலகிச் சென்றுவிட்டதென, வானிலை அவதான நிலையம் நேற்று அறிவித்தது.

இதனால், இலங்கைக்கு இனி எந்தவொரு பாதிப்பும் இல்லை எனவும் கூறிய அவதான நிலையம், நேற்றுப் பிற்பகல் வேளை வரையில், இந்தத் தாழமுக்கம், திருகோணமலையிலிருந்து சுமார் 800 கிலோமீற்றர் வடக்கில் நிலைகொண்டு, வங்காள விரிகுடாவின் வடக்கின் ஊடாக, வடமேல் திசையை நோக்கிப் பயணித்து வருவதாகவும் கூறியது.

இதனால், நாட்டின் வடகிழக்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளிலிருந்து சுமார் 300 கிலோமீற்றர் தூரத்திலான கடற்பரப்பில், மணிக்கு 80 மற்றும் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இதனால், அக்கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டது.

இதனால், ஹம்பாந்தோட்டை முதல் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புப் பிரதேசங்களில், அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும், நிலையம் எதிர்வுகூறியது.

Comments
Loading...