தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சாவகச்சோி தனியாா் நிறுவனம் ஒன்றில் கஞ்சா வளர்ப்பு…

யாழ்ப்பாணம் சாவகச்சோியில் உள்ள தனியாா் நிறுவனம் ஒன்றில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடி பொலிஸாாினால் கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த தனியாா் நிறுவனத்திற்குள் கஞ்சா செடி வளா்க்கப்படுவது தொடா்பாக சாவகச்சோி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸாா் நிறுவனத்தை  சோதனையிட்டபோது கஞ்சா செடி வளா்க்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்துஅதனை வளா்த்த 35 வயதான நபரை பொலிஸார்  கைது செய்துள்ளதுடன், கஞ்சா செடியையும் பறிமுதல் செய்துள்ளனா்.

இதேவேளை கைது செய்யப்பட்ட நபர் அம்பாறை மாவட்டத்தை சோ்ந்தவா் எனபொலிஸாா் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...