தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிங்கள இராணுவமாக்கப்படும் தமிழ்ச் சிறுவர்கள்?? கண்டுகொள்ளாத தமிழ் அரசியல்வாதிகள்

கட்டமைக்கப்பட்ட உச்சக்கட்ட இனஅழிப்பின் சாட்சியத்தை இந்தப் படம் உறுதிப்படுத்துகிறது. 12 -16 வயதுடைய தமிழ் மாணவர் பராயத்தைச் சேர்ந்த தமிழ்ச் சிறுவர்களை மறைமுகமாக அரசவேலைவாய்ப்பு எனப் பொய் வாக்குறுதிகளை வழங்கி, சிங்களக் கட்டாய இராணுவப் பயிற்சி திணிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தியைப் பார்க்கும் வரை இப்படி ஒன்று நடப்பதே எமக்குத் தெரிந்திருக்காது.
தமிழ் இனத்தின் அடுத்த தலைமுறை, தமிழ் இனத்துக்கு எதிரான இன அழிப்புகளைத் தட்டிக்கேட்க முடியாதவாறு, முளையிலே பிடுங்கி இனமாற்றம் செய்யப்படும் கொடூரத்தை தமிழனம் எவ்வாறு கடந்துசெல்ல முடியும்!
இவ்வாறான இன அழிப்புகள் சட்டத்துக்கு ஊடாக அங்கீகாரம் வழங்கப்படுகின்றன.
70ஆண்டுகளுக்கு மேலாக தமிழின அழிப்பைச் செய்துவந்த பச்சைச் சிங்கள உருமறைப்புச் சீருடைக்குள் தமிழ்ச் சிறுவர்கள் போர்த்தப்பட்டு, சிங்கள இராணுவத்தின் இனவழிப்புக் கறைகள் கழுவப்படுவதற்குப் பயன்படுத்தப் படுகின்ற கொடுமையைப் பொறுக்க முடியுமா??!!
எண்ணுக்கணக்கற்ற தமிழ்ப் பெண்களைச் சீரழித்த இந்த சிங்களச் சீருடையை, அந்தச் சிறுவர்களின் பேற்றோர்கள் மறந்துவிட்டார்களா என்ன?
இந்தப் பூமியில் தமிழினம் உள்ளவரை மறக்கப்பட முடியாத கொடுமையான அந்த இன அழிப்புத்தான்” தனித் தமிழீழத்தின் அவசியத்தை உலகநாடுகள் முன் வலியுறுத்தி நிற்கின்றது. கட்டாயத்தின் பேரில் அணிவிக்கப்படும் சிங்களச் சீருடையும், சிங்கள இனமாற்ற நோக்கப் பயிற்சிகளும் எமது இளந் தலைமுறையைக் குறிவைத்து வருகின்றது.


நாளடைவில் தமிழர்கள் இனமாற்றம் செய்யப்பட்டு, அடையாள இழப்புக்கு ஆளாக்கப்பட்டு, உரிமைகளை மீட்டெடுக்க முடியாத இனமாக வேற்று இனத்தவனின் சீருடைக்குள் புகுத்தப்படுவதை எதிர்த்து தமிழ்ச் சமூகம் பாரிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
* பாரிய விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை தமிழ்ச் சமூகம் ஒவ்வொரு கிராமம் கிராமமாக முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
* இன அழிப்பைக் கண்டுபிடித்துத் தடுப்பதற்கான ஒரு அமைப்பு தாயகத்தில் உருவாக்கப்பட வேண்டும். அப்படியான ஒரு அமைப்பு, தாயத்தில் தமிழர்கள் மீது மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் முன்னெடுக்கப்படும் இன அழிப்பை வெளிப்படுத்தல், ஆவணப்படுத்தல், சட்ட ரீதியாக எதிர்கொண்டு தடுத்தல் ஆகிய செயற்பாடுகளைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.


* அரசியல் வாதிகளை நம்பியிராது, சமூகப் பாதுகாப்பு இயக்கங்களை நிறுவி, எமது இனத்தின் பண்பாடு, கலை, இலக்கியங்கள் பாரம்பரியங்கள், வராலாறு என்பவற்றை பாதுகாத்துப் பேண வேண்டும்.
* யாரும் மீட்பர்கள் வருவார்கள் என்று கனவுலகத்தில் மிதக்காது, எமது இனத்தைப் பாதுகாக்கக்கூடிய பொருளாதார மேம்பாட்டுக்கான மற்றும் சமூகக் கட்டமைப்புகளை நிறுவி  எமது சுதந்திர நாளுக்கான காலம் அரும்பும் வரை  எமது இனத்தை அழிவில் இருந்து பாதுகாப்பதற்காக முன்னின்று உழைக்க வெண்டியதுதான் இப்போது நாம் ஆற்றவேண்டிய சிறந்த பணியாக இருக்கும்.
* கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் சிங்கள ஆட்சியின் தேர்தல் அரசியலுக்குள் காலத்தை வீணடிக்காது, ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுக்க தமிழ் அறிவாளிகள் களத்துக்கு வரவேண்டும்.


த.ஞா.கதிர்ச்செல்வன்.

Comments
Loading...