Designed by Iniyas LTD
சிங்கள மயமாக்கலின் மற்றுமொரு முயற்சி நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் திடீரென கணதேவி என புதிய பெயர்ப்பலகை…
முல்லைத்தீவு – செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் பெயரை கணதேவி என புதிய பெயர்ப்பலகை இட்டு . புதிதாகபாரிய புத்தர் சிலை திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது..
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
குறித்த ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் பிரதேசசபை, பொதுமக்கள்,பிரதிநிதிகள் மற்றும் ஆலய நிர்வாகம் என்பன கடுமையாக எதிர்த்தனர். இதனைத் தொடர்ந்து அடுத்து இதன் கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
தற்போது குறித்த ஆலய வளாகத்தில் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு நீராவியடிப் பிள்ளையார் பழைய செம்மலை எனக் குறிப்பிடப்பட்டிருந்த பழமையான பெயர் நீக்கப்பட்டு தற்போது கணதேவி தேவாலயம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது அத்துடன் இங்கு புதிதாக புத்தர் சிலை ஒன்றை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா கூறியதாவது; இந்த பிள்ளையார் ஆலயம் மிகவும் தொன்மையானது. இந்த ஆலயத்தை இல்லாதொழித்து பௌத்த விகாரை அமைக்கும் செயற்பாடானது தமிழர்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கும்.செயலாகும்
அத்துடன் எமது இனத்தை இல்லாதொழிக்கின்ற ஒரு செயற்பாடாகவே அமைந்துள்ளது என தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.