தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிறுமி றெஜினா படுகொலை தொடர்பில் மூவரை கைதுசெய்யுமாறு உத்தரவு…

யாழ் சுழிபுரத்தில் சிறுமி றெஜினா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேகநபர்கள் மூவரை கைது செய்யுமாறு மல்லகம்  நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நேற்றைய தினம் குறித்த வழக்கு மல்லாகம் நீதிமன்றில்  நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சிறுமி றெஜினா சார்பில் சட்டத்தரணி சுகாஷ் மன்றில் ஆஜராகியிருந்ததோடு,

சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என  நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார்.

அதோடு அவர்களை கைது செய்ய வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு உத்தரவிடுமாறும் அவர்  கோரியுள்ளார்.

இதன் அடிப்படையில்  பிரதான சந்தேகநபர்கள் மூவரையும்  கைது செய்யுமாறு வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, சிறுமி றெஜினா கொலை தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...