தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிறைக்கு சென்றுள்ள வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் …..

வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் நேற்றையதினம்  அனுராதபுரத்தில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் 13 பேர் மிகவும் உடல் நலம் குன்றி நடமாடமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள கைதிகளின் நிலை மிகவும் மோசமானதாக உள்ளதாகவும்,கைத்தாங்கலாக வரக்கூடிய நிலையில் உள்ள 5 பேரை மாத்திரம் தான்  சந்தித்ததாகவும் அனந்தி சசிதரன் கூறியுள்ளார்.

தாங்கள்  விடுதலை செய்யப்படவேண்டும் என்றும் அவ்வாறு  விடுதலை செய்வதில் சிக்கல்  காணப்படுமாயின் தங்களை மிகக்குறுகியகால புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கைதிகள்  முன்வைக்கின்றார்கள்.

இந் நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது போராட்டத்தினை மழுங்கடிக்கச்செய்கின்ற வகையில்,

சில நடவடிக்கைகளை எடுத்து வருவதையும் அறியக்கூடியதாக இருப்பதாகவும் அனந்தி சசிதரன் கூறியுள்ளார்

மேலும் அரசியல் கைதிகள் உணவின்றி சாவிற்கு போராடிக்கொண்டிருக்கின்ற போது , நாம்  நிகழ்வுகளில்  கலந்துகொண்டு மக்கள் பிரதிநிதிகளாக ,

அரசுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கின்ற நிலையில் இருந்து மாறவேண்டும் எனவும் அனந்தி சசிதரன்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...