தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிறைச்சாலையை திகைக்க வைத்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்…

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடைபவணி கொட்டும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டு இன்று நிறைவடைந்துள்ளது

நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 29 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்”
அரசியல் கைதிகளின் விவகாரம் ஓர் சட்ட விவகாரம் அல்ல அது ஓர் அரசியல் விவகாரம். எனவே அரசியல் கைதிகளின் அரசியலை பயங்கரவாதமாக பார்க்குமோர் சட்டக்கட்டமைப்புக்குள் நின்று அதை சட்ட விவகாரமாக அணுக கூடாது. மாறாக அதனை அரசியல் விவகாரமாகவே அணுக வேண்டும். இது தொடர்பில் அரசாங்கம் ஓர் அரசியல் தீர்மானத்தை எடுத்து கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்.இதனை வலியுறுத்தியும் அரசியல் கைதிகளின்உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 09.10.2018 அன்று  யாழ் பல்கலைக்கழக முன்றலில் இருந்து  கிளிநொச்சி மாங்குளம்  வவுனியா ஊடாக  அநுராதபுர சிறைச்சாலை வரை நடைபயணம் ஒன்றினை ஆரம்பித்தனர்.

பல்வேறு தரப்புக்களின் ஆதரவுடனும் சென்ற இந்த நடைபவனி அனுராதபுர சிறைச்சாலையை சென்றடைந்ததும் மாணவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதோடு 5 மாணவர்கள் அரசியல் கைதிகளை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்

அவர்களை பார்வையிட்டு வந்த மாணவர்கள் உங்களது எதிர்காலத்துக்காக போராடினோம் இன்று உங்களையும் போராட தள்ளப்பட்டமையை இட்டு வேதனை அடைந்ததாகவும் எம்மால் முடிந்தளவு போராட்டத்தை செய்துள்ளோம் இந்த நிலைக்கு கொண்டுவந்திருக்கிறோம் அரசியல் தலைவர்கள் இந்த பிரச்னையை உரிய முறையில் தீர்க்கவேண்டும் என கோரியுள்ளனர் அத்தோடு இவர்களின் விடுதலை சாத்தியமாக்காவிட்டால் இம்முறை வரவு செலவு திட்டத்தை ஆதரிக்க கூடாது எனவும் கோரியுள்ளனர்

Comments
Loading...