தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சீனாவின் அணு ஆயுத ஏவுகணை சோதனை மீண்டும் வெற்றி – அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம்…

ஒலியை விட அதிக வேகமாக அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணையை சீனா மீண்டும் வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.

டி எப் 26 (DF 26) என்று பெயரிடப்பட்ட அந்த ஏவுகணை ஏவப்பட்ட இடத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகக் தாக்கியுள்ளது.

குறித்த ஏவுகணை 3 ஆயிரம் கிலோ மீட்டர் முதல் 5 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்கும் எனவும் கூறப்படுகின்றது.

இந்த ஏவுகணை மூலம் அமெரிக்காவின் எந்த நகரத்தையும் தாக்கும் வல்லமையை சீனா பெற்றுள்ளது.

இதனை தரையிலிருந்து கனரக வாகனங்கள் மூலமும், விமானத்தில் எடுத்துச் சென்றும் டி எப் 26 ஏவுகணையை செலுத்த முடியும்.

இதேவேளை சீனாவின் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...