தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சீனாவில் நிலநடுக்கம்..

சீனாவில்  இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்த்தால்  மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டின் ஜின்ஜிங் பிராந்தியத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.1 ஆக பதிவாகி உள்ளது.

காஷ்கர் நகருக்கு வடக்கே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்து நிலநடுக்கத்தால், பல ஊர்களில்  வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.

இதனால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

இந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு  பல ஊர்களில் மின்வினியோகம் நிறுத்தப்பட்டதோடு . ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

Comments
Loading...