தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானம்..

பல கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

அதன்படி குறித்த  போராட்டம் இன்று  முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்திற்கு அதிபர்கள், இலங்கை கல்வி சமூக சம்மேளனம், உள்ளிட்ட கல்வித்துறையுடன் தொடர்புபட்ட 30 தொழிற்சங்கங்கள்  ஆதரவளிக்கவுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சினை, கடந்த 30 மாதங்களாக வழங்கப்படாதுள்ள நிலுவைத் தொகையை மீள வழங்குதல், ஓய்வூதியம் தொடர்பான முரண்பாடுகள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை   கடந்த மாதம் கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்ததாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...