தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சூப்பர் மேன் படத்தின் கதாநாயகி காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகை மார்கட் கிட்டர் (69). இவர் 1968ல் ஹாலிவுட்டில் அறிமுகம் ஆனார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர், 1978ல் வெளியான சூப்பர்மேன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பின்னரே இவர் உலகம் முழுவதும் பிரபலமானார்.
சூப்பர்மேன் நடித்த அனைத்து பாகங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் தி நெய்பர்ஹுட்.
இந்த படம் கடந்த ஆண்டு வெளியானது. மேலும், இவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், மார்கட் கிட்டர்  அமெரிக்காவில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது இறப்புக்கான காரணம் வெளியாகவில்லை.
68 வயது வரை நடிப்பில் கவனம் செலுத்தி வந்த மார்கட் கிட்டருக்கு ஹாலிவுட் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Comments
Loading...