தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சூரிய ஒளி உடம்பில் படுவதால் ஏற்படும் நன்மைகள்!

இன்றைக்கு எல்லாரும் ஏசி அறையில் இருப்பதைத் தான் விரும்புகிறார்கள். காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை மிக குறைந்த அளவிலான நேரத்திற்கு மட்டும் தான் ஏசியில்லாமல் இருக்க முடிகிறதுஅதிக நேரம் சூரிய ஒளியில் நின்றால் அது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் அது உடல்நலனுக்கு என்னென்ன நன்மைகள் செய்கிறது தெரியுமா? சூரிய ஒளி உங்களிடம் அதிகப்படியான செரொடோனின் சுரக்கச் செய்திடும். இது சுரப்பது குறைவதால் தான் நாம் உற்சாகமின்றி சோகமாக, அல்லது எந்த விஷயமும் செய்ய விருப்பமின்றி இருக்கிறோம்.

இது மன அழுத்தத்திற்கும் வழி வகுக்கும். சூரிய ஒளியில் அதிக நேரம் செலவழித்தால் இந்தப் பிரச்சனை ஏற்படாது. சூரிய ஒளியிலிருந்து நமக்கு விட்டமின் டி கிடைக்கிறது. இது எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. உணவு மூலமாக மட்டுமே நமக்கு தேவையான விட்டமின் டி எடுத்துக் கொள்ள முடியாது. அதற்காக சூரிய ஒளி படும்படி சிறிது நேரம் நிற்கலாம். குறைந்த ரத்த அழுத்த பாதிப்பிலிருந்து மீள்வதற்கு சூரிய ஒளி துணை புரியும். நம்முடைய சருமத்தின் மேல் தோல் நைட்ரிக் ஆக்ஸைடினை சேமித்து வைத்திருக்கும். இது சூரிய ஒளி படும் போது நைட்ரிக் ஆக்ஸைடு ரத்த நாளங்களுக்குச் சென்று ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தும். இதனால் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படும். சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு குறைவாகத்தான் இருக்கும்.

சருமத்தில் ஏற்படும் புற்றுநோய் மட்டுமல்ல உள்ளுறுப்புகளில் ஏற்படும் புற்றுநோயின் தாக்கத்தை குறைக்க கூடிய ஆற்றல் சூரிய ஒளிக்கு இருக்கிறது. சருமத்தில் தோன்றிடும் சில பிரச்சனைகளை நீக்ககூடிய ஆற்றல் சூரிய ஒளிக்கு உண்டு. அதோடு நோய் தொற்றிலிருந்தும் நம்மை பாதுகாக்கும். ஆர்த்ரைட்டீஸ், மஞ்சள்காமாலை போன்ற பாதிப்புகளிலிருந்து தப்பிக்க அடிக்கடி சூரிய ஒளியில் பட வேண்டும்

Comments
Loading...