தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சென்னையில் பேட்டயா?? விஸ்வாசமா ??

பேட்ட , விஸ்வாசம் படங்கள் கடும் மோதலுக்கு இடையில் பிரம்மாண்டமாய்  நேற்று முன்தினம்  வெளியாகியுள்ளது.

இதனை ரஜினி ,அஜித் ரசிகர்களும் பொங்கல்விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் பாக்ஸ் ஆபிஸில் மோதி கொண்டன.

அந்தவகையில்  சென்னையில் முதல் நாளில் ‘ பேட்ட’ 1.12 கோடி வசூல் செய்துள்ள நிலையில்  ‘ விஸ்வாசம் ‘ முதல் நாளில் வெறும் 90 லட்சத்தை தான் வசூல் செய்துள்ளது.

முதல் நாளில் சென்னையில் ‘பேட்ட ‘படம் முதலிடம் பிடித்தது. ஆனால் ‘ விஸ்வாசம் ‘சற்று பின்னடைவை சந்தித்தது.

மேலும் இரண்டாம் நாள் வசூலை பொறுத்தவரை வசூலில் மீண்டும் ‘ பேட்ட’ தான்  முதலிடத்தில் உள்ளது.

சென்னையில் இரண்டாம் நாளில் ‘ பேட்ட’ 1.08 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும் இரண்டாம் நாளில் ‘ விஸ்வாசம் ‘ ரூ 60 லட்சத்தை தான் வசூல் செய்துள்ளது. இரண்டாம் நாளிலும் பேட்டயே முன்னிலை வகிக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

Comments
Loading...