தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோவர்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ள நாசா

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள  நாசா   ஏற்கனவே ‘ரோவர்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது செவ்வாய் மீது நகர்ந்து செல்லும் சிறிய வாகனம் ஆகும்.

இது அங்கு சில ஆராய்ச்சிகளை செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது.

இந்நிலையில் அதன் வேகம் போதவில்லை என  கருதிய நாசா  தற்போது ‘இன்சைட்’ என்ற புதிய ரோபோவை செவ்வாய் கிரகத்துக்கு  அனுப்பியுள்ளது.

செயற்கைகோள்


குறித்த ரோபோ  கடந்த 5-ந்தேதி வெற்றிகரமாக  செவ்வாய்மீது  ஏவப்பட்டது.

இந்த ‘இன்சைட்’ ரோபோவுடன் 2 செயற்கைகோள் பொருத்தப்பட்டுள்ளன.

குறித்த ரோபோ செவ்வாய் கிரகத்தில் இறங்கியவுடன் அங்கு குழி தோண்டி ஆய்வை தொடங்கும்.

அதே நேரத்தில் செயற்கைகோள்கள் செவ்வாய் கிரகத்தை சுற்றி  வந்து  ஆராய்ச்சி தகவல்களை உடனுக்குடன் பூமிக்கு அனுப்பும் .

‘ரோபோ’வுக்குள் உள்ள  சிறிய நிலநடுக்க கருவி   செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் நிலநடுக்கத்தை ஆய்வு செய்து அனுப்பும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

எனினும் குறித்த ரோபோ   இன்னும் செவ்வாய் கிரகத்தை சென்றடையவில்லை எனவும் கூறப்படுகின்றது.

Comments
Loading...