தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

செவ்வாய் தோஷம் நீக்கும் ஆடிக்கிருத்திகை…

நாளையதினம்  ஆடிக்கிருத்திகை. முருகப்பெருமானிற்கு சிறப்பான நாள்.

இந்த நாளில்  முருகனை வழிபாடு செய்தால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் செவ்வாய் தோஷ தடைகள் நீங்கும் என சொல்லப்படுகின்றது.

ஜோதிட சாஸ்திர விதிகளின்படி முருகப்பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம்,
மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சினைகள், சகோதரர்களால் சங்கடங்கள், குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆடிக்கிருத்திகை தினத்தில் முருகனை வணங்க அனைத்து கவலைகளும் அகன்றுவிடும்,
மேலும் பிரச்சினைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும் என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.
நம்பிக்கையுடன் மனமுருக பிரார்த்தித்து சகல நலங்களும் பெறுவோமாக.
Comments
Loading...