தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக சங்கக்காராவை இறக்க ஐக்கிய தேசிய முன்னணி திட்டம்…

இலங்கையின்  அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பிரபல விளையாட்டு வீரர் குமார் சங்கக்கார போட்டியிடுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக  தகவல்கள் கசிந்துள்ளன.

ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பொது வேட்பாளராக குமார் சங்கக்கார களமிறக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கபப்டுகின்றது.

சர்வதேச ரீதியில் குறிப்பிடத்தக்க சாதனையாளராக  விளங்குகின்ற குமார் சங்கக்காரவை  ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதன்மூலம் கணிசமானளவு மக்களின் வாக்குகளைப் பெறக்கூடிய வாய்ப்புக்கள்  ஏதுவாக இருக்கும் என்றும் குறித்த கட்டசி கருதுகின்றது.

குறிப்பாக குமார் சங்கக்கார அனைத்து இன மக்களும் விரும்புகின்ற ஒரு விளையாட்டு வீரராக விளங்குகின்றார்.

இதேவேளை  தற்பொழுது இங்கிலாந்தின் கவுண்டி அணியான சர்ரே அணிக்காக விளையாடிவரும் குமார் சங்கக்கார இந்த விடயம் தொடர்பில்  இதுவரை எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...