தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்த ஜனாதிபதி திட்டம்…

ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருவதாக, கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக,  அவர் மகிந்த ராஜபக்சவுடன்,  ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்புக்கு அமைய, ஜனாதிபதித் தேர்தலை  எதிர்வரும் 9ஆம் திகதிக்குப் பின்னர் எந்த நேரத்திலும் ஜனாதிபதி  அறிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவும் சிறிலங்கா ஜனாதிபதிக்குக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்தப் பின்னணியிலேயே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்  பொதுச்செயலரை அவர் மாற்றியுள்ளதாகவும், மாகாணங்களுக்கு தனது ஆதரவாளர்களை ஆளுநர்களாக நியமித்துள்ளதாகவும் குறித்த ஊடகம்  மேலும் தெரிவித்துள்ளது.

Comments
Loading...