தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜூலி படத்திற்கு பி.சுசீலாவின் இசையமைப்பு.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரலமானவர் ஜூலி.

இவர் தற்போது, நீட் தேர்வால் மருத்துவ கனவை இழந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் வாழ்கையை மையமாக வைத்து உருவாகும் டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா முதல் முறையாக இசையமைக்கவுள்ளார்.

பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா சுமார் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

இப்படத்தை பற்றி அவர் பேசுகையில், படக்குழுவினர் வலியுறுத்தியதாலும் இக்கதை என்னை நெகிழ வைத்ததாலும் நான் இதை ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார் பி.சுசீலா.

Comments
Loading...